2023-ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்:
சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கொண்டுவர அமைச்சகம் அதன் திட்டங்களை நெறிப்படுத்தியுள்ளது மற்றும் காலக்கெடு அடிப்படையிலான ஒப்புதல் செயல்முறையுடன் விரிவான ஒத்திசைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.8139.50 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (என்.இ.எஸ்.ஐ.டி.எஸ்) தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முந்தைய வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டத்தை (என்.இ.ஆர்.எஸ்.டி.எஸ்) என்.இ.எஸ்.ஐ.டி.எஸ்-சாலைக் கூறுகளுடன் இணைப்பது உள்ளிட்ட அரசின் முடிவுகளின்படி, 15-வது நிதிக் குழுவின் எஞ்சிய காலத்தில் மறுசீரமைக்கப்பட்ட என்.இ.எஸ்.ஐ.டி.எஸ்-ஐ நிர்வகிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குவது அவசியமாகிறது. அதன்படி, தேசிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு கூறுகளையும் நிர்வகிக்கவும் செயல்படுத்தவும் புதிதாக உருவாக்கப்பட்ட தனி வழிகாட்டுதல்கள் 21.08.2023 அன்று விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளன.
- 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ .3202.7 கோடி மொத்த ஒதுக்கீட்டில் ‘என்.இ.சி திட்டங்களை’ தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விரிவான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு 21.08.2023 அன்று “என்.இ.சி.யின் திட்டங்களுக்கான” புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- 21.08.2023 அன்று வெளியிடப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 12.10.2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த முன்முயற்சி, 2022-23 மத்திய பட்ஜெட்டில் 100% மத்திய நிதி உதவியுடன் ஒரு புதிய மத்திய துறை திட்டமாக அறிவிக்கப்பட்டது.
- 26.12.2023 வரை ரூ.855.85 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.3138.68 கோடி மதிப்பிலான 14 திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ரூ .983.05 கோடி மதிப்புள்ள 12 திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் கொள்கையளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2017-18 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. 01.04.2022 முதல் இத்திட்டத்தின் விரிவாக்கத்தின் போது, முந்தைய திட்டம், என்.இ.எஸ்.ஐ,டி.எஸ் (சாலைகள்) மற்றும் என்.இ.எஸ்.ஐ,டி.எஸ் (சாலை உள்கட்டமைப்பு நீங்கலாக) ஆகிய இரண்டு கூறுகளாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை ரூ.552.63 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.182.54 கோடி மதிப்பிலான 3 திட்டங்கள் ஒப்புதலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.1452.87 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் என்.இ.எஸ்.ஐ.டி.எஸ் (சாலைகள்) திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- என்.இ.எஸ்.ஐ,டி.எஸ் (சாலை உள்கட்டமைப்பு நீங்கலாக) திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட மொத்த திட்டங்கள் ரூ .18488.94 கோடி மதிப்புள்ளவை, அவற்றில் ரூ .11250.83 கோடி மதிப்புள்ள 1098 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன மற்றும் ரூ .7238.04 கோடி மதிப்புள்ள 450 திட்டங்கள் நடந்து வருகின்றன.
- மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வடகிழக்கு கவுன்சில் (என்.இ.சி) என்ற மத்திய அரசின் திட்டம், 10-வது நிதிக்குழு காலத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக 31.03.2022 வரை தொடரப்பட்டது.
- இத்திட்டத்தை 01.04.2022 முதல் 31.03.2026 வரை 15-வது நிதிக் குழுவின் (2022-23 முதல் 2025-26 வரை) காலகட்டத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள எட்டு மாநிலங்களுக்கும் பொருந்தும்.
- அரசின் தற்போதைய கொள்கையின்படி, விலக்கு அளிக்கப்படாத அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள் (தற்போது 54) தங்கள் மொத்த பட்ஜெட் ஆதரவில் (ஜி.பி.எஸ்) குறைந்தபட்சம் 10%ஐ மத்திய துறை மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான (என்.இ.ஆர்) மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு (ஜி.பி.எஸ்) செலவிட வேண்டும்.
- துறையின் அமைச்சர் / செயலாளர் ஆகியோர் மட்டத்தில் வழக்கமான காலாண்டு மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து அமைச்சகங்களும் தங்கள் ஜி.பி.எஸ்-இல் 10 சதவீதத்தை வடகிழக்கு பிராந்தியத்திற்காக செலவிடுவதை உறுதி செய்கின்றன.
- 12.10.2023 அன்று தரவு பகுப்பாய்வு தகவல் பலகையை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது , இது 55 துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள 112 திட்டங்களின் தரவுகளைக் கொண்டுள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள திட்டங்களின் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளுக்கான ஒரு அளவுகோலை உருவாக்கும் தகவல் பலகை, மின் ஆளுமையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை இணைப்பதுடன் பல துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள தகவல்களை ஒரே மேடையில் காட்சிப்படுத்தும்.
- லட்சியமிக்க அகௌரா அகர்தலா புதிய ரயில் பாதைத் திட்டம் 01/11/2023 அன்று இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
- கொல்கத்தா முதல் டாக்கா வரை இயக்கப்படும் மைத்ரி விரைவு ரயிலை அகர்தலா வரை நீட்டித்து, பயண நேரத்தை 38 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரமாக குறைக்கலாம் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் . இப்பணியின் மொத்த நீளம் 12.24 கி.மீ மற்றும் இரு நாடுகளின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1273 கோடி ஆகும். இந்த திட்டம் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் அடையாளமாகும், மேலும் பிராந்திய இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தும்.
- வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், பிராந்தியத்தில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் / திட்டங்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், ஒவ்வொரு வடகிழக்கு மாநிலத்திற்கும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு மத்திய அமைச்சர் வருகை தர முடிவு செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், 74 மத்திய அமைச்சர்கள் நவம்பர் 2023 வரை 148 க்கும் மேற்பட்ட முறை இப்பகுதிக்கு பயணம் செய்துள்ளனர்.