ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பது சட்டப்படி மிகக் கொடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடைபெறத்தான் செய்கின்றன. 2023ஆம் ஆண்டில் நாட்டையே உலுக்கிய கொலைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
1)உமேஷ் பால் கொலை வழக்கு :
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் 2007-ம் ஆண்டு கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24-ம் தேதி பிரயாக்ராஜில் உள்ள அவரது வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அவரது 2 பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.
உமேஷ் பால் கடத்தல் வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் ஜான்சியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் உயிரிழந்தனர்.
2)அதிக் அகமது, அஷ்ரப் அகமது கொலை வழக்கு :
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களை போல கைகளில் மைக், ஐடி கார்டு மற்றும் கேமராவுடன் வந்த லுவ்லேஷ் திவாரி உள்ளிட்ட மூவரும் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டு கொலை செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த காட்சிகள் நேரலையில் பதிவு வெளியானது.
3)நிக்கி யாதவ் கொலை வழக்கு :
டெல்லியில் லிவ்-இன் பார்ட்னரான இளம் பெண் நிக்கி யாதவை கொலை செய்து, அவரது உடலை, தான் நடத்தி வந்த உணவகத்தின் ஃபிரிட்ஜில் காதலன் சாஹில் கெல்லட், பதுக்கி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிக்கி யாதவை ரகசிய திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்ததாகவும்,கைது செய்யப்பட்ட காதலன் சாஹில் கெல்லட் தெரிவித்தான். தனது வீட்டார் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ததாகவும், அந்த பெண்ணுடன் திருமணம் முடிவானதாகவும் அவன் கூறியுள்ளான். இதனை அறிந்தத் நிக்கி யாதவ் பிரச்சினை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் குடுமபத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நிக்கி யாதவை கொலை செய்ததாக காதலன் சாஹில் கெல்லட் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.
4)ஷஹபாத் பால் பண்ணை கொலை வழக்கு :
டெல்லியின் ஷஹபாத் டெய்ரியில் 16 வயது சிறுமியை 20 வயது சிறுவன் கொடூரமாக கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவருக்கும் பழக்கம் உள்ளதை அறிந்த் பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்துமாறு சிறுமியிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து காதலனை சந்திப்பதை அந்த சிறுமி தவிர்க்க தொடங்கினாள். ஆனால் அந்த சிறுவன் சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி நண்பர்களுடன் காதலனை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியை தனியாக வரவழைத்த காதலன்,20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொன்றுள்ளான். மேலும் அவர் இறக்கும் வரை அருகில் கிடந்த கான்கிரீட் ஸ்லாப் மூலம் தாக்கி கொலை செய்துள்ளான். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் தப்பியோடிய சிறுவனை உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் போலீசார் கைது செய்தனர்.
5)சஞ்சீவ் ஜீவா கொலை வழக்கு :
கடந்த ஜூன் மாதம் உத்தரப் பிரதேசத தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பபட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், சிறையில் இருந்த சஞ்சீவ் ஜீவா, வழக்கு விசாரணைக்காக லக்னோ சிவில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் அவர் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
6) டெல்லியில் ரூ.350 கொலை வழக்கு :
டெல்லியில் 350 ரூபாய்க்காக வாலிபரை கொலை செய்து உடல் மீது கொலையாளி நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது 16 வயது சிறுவன் 18 வயதுடைய இளைஞரை கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
அந்த இளைஞர் வைத்திருந்த 350 ரூபாயை பறிக்க முயன்றதாகவும், அதனை தடுத்ததாதல் ஆத்திரமடைந்த சிறுவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். வெறி அடங்காத அந்த கொலைகாரன் உடல் மீது நின்று நடனம் ஆடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
7)ஜெய்ப்பூர்-மும்பை ரயில் துப்பாக்கி சூடு :
ஜெய்ப்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) வீர்ர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் RPF உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை 31ஆம் தேதி ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸின் B5 பெட்டியில் வாபி மற்றும் போரிவலி நிலையங்களுக்கு இடையே அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.கான்ஸ்டபிள் சேத்தன் சிங், ரயிலில் மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. B5 பெட்டியில் இருவரை சுட்டுக்கொன்ற அவர்,S6 பெட்டியில் இருவரை சுட்டுக்கொன்றார். பின்னர் அபாய சங்கிலியை இழுத்து தப்பியோட முயன்ற அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.