அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த விழவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் சென்னையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அவரது குடும்பத்திற்கு ஸ்ரீ. ராமராஜசேகர் அழைப்பிதழ், ராமர் படம், அட்சதையை வழங்கி அழைப்பு விடுத்தார்.