கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எந்த எந்த பேருந்துகள் புறப்படும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து எந்த எந்த பேருந்து புறப்படும் என்றும், குறிப்பாக எப்போது முதல் செயல்பாட்டிற்கு வருகிறது என்பதில் வெளியான அறிவிப்புகளால் பொது மக்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். இந்த குழப்பங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான, தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் தை பொங்கலுக்கு பின்னர், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான, தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு பின்னர், அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.