நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90.
தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் காலமானார்.
இது எங்க நாடு, அண்ணே அண்ணே, நான் மகான் அல்ல, பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லியோ பிரபு.
கோயம்புத்தூரை பூர்வமாக கொண்ட இவர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முக தன்மையோடு விளங்கினார்.
பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்த லியோ பிரபு, பல தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.
கடந்த 1990 -ம் ஆண்டு இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இவருக்கு உஷா என்ற மனைவியும், முருகசங்கரி என்ற மகளும் உள்ளனர்.