2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த ஆண்டை மகிழ்ச்சியாக முடித்து வைக்கும் விதமாக ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்துள்ளது தளபதி 68 படத்தின் படக்குழு.
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார். இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அப்போது பிரம்மாண்ட செட் அமைத்து விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து ஆடிய நடனக்காட்சி ஒன்றை படமாக்கி இருந்தது.
இதையடுத்து படக்குழுவுடன் தாய்லாந்து சென்ற நடிகர் விஜய் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சியில் நடித்தார். பின்னர் இந்தியா திரும்பிய படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வந்தது. தற்போது புத்தாண்டு விடுமுறையால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட்டுகளை கொடுத்து புத்தாண்டிற்கு ட்ரீட் வைத்துள்ளது படக்குழு.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வெங்கட் பிரபு அறிவித்து. வழக்கமாக தன் படத்தில் வரும் டேக் லைன் 7 எழுத்தில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதன் டேக் லைனாக A Venkat Prabhu Mission என வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பர்க்க வேண்டும்.