ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த தளபதி 68 படக்குழு!
Sep 12, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த தளபதி 68 படக்குழு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த ஆண்டை மகிழ்ச்சியாக முடித்து வைக்கும் விதமாக ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்துள்ளது தளபதி 68 படத்தின் படக்குழு.

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார். இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அப்போது பிரம்மாண்ட செட் அமைத்து விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து ஆடிய நடனக்காட்சி ஒன்றை படமாக்கி இருந்தது.

இதையடுத்து படக்குழுவுடன் தாய்லாந்து சென்ற நடிகர் விஜய் அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சியில் நடித்தார். பின்னர் இந்தியா திரும்பிய படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வந்தது. தற்போது புத்தாண்டு விடுமுறையால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட்டுகளை கொடுத்து புத்தாண்டிற்கு ட்ரீட் வைத்துள்ளது படக்குழு.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வெங்கட் பிரபு அறிவித்து. வழக்கமாக தன் படத்தில் வரும் டேக் லைன் 7 எழுத்தில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதன் டேக் லைனாக A Venkat Prabhu Mission என வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பர்க்க வேண்டும்.

Tags: cinema newsvijaya 68 film
Share
Tweet
SendShare
Previous Post

மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

புத்தாண்டு கொண்டாட்டம்! – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies