நாளை காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிலையில், இன்று காலை இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு செய்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் அனைத்து ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு முறை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கு முன்பு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதை இஸ்ரோ குழு வழக்கமாக வைத்திருக்கிறது.
அந்த வகையில், சந்திரயான்-3 விண்கலம், ஆதித்யா எல்.1 விண்கலம் உள்ளிட்ட அனைத்தையும் விண்ணில் செலுத்தும்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட குழுவினர் திருமலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வந்தனர். இவை அனைத்தும் வெற்றி பெற்றன.
இதையடுத்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் எக்ஸ்போசாட் உட்பட 10 செயற்கைக்கோள்களுடன் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ குழுவினர் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மாதிரியுடன் திருப்பதிக்குச் சென்று வழிபாடு செய்தனர்.
இதில் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள தூசு, நிறமாலை, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை ஆய்வு செய்யவுள்ளது.
#WATCH | ISRO scientists Amit Kumar Patra, Victor Joseph, Yashoda, and Srinivas visit Tirumala Sri Venkateswara temple ahead of the launch of PSLV-C58/EXPOSAT mission, which is scheduled at 09:10 hrs IST on Monday, 1st January 2024. The launch is planned from Satish Dhawan Space… pic.twitter.com/Q6hOEMn4Cf
— ANI (@ANI) December 31, 2023