இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியைத் அந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தென் ஆப்பிரிக்கா அணியை அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம்.
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் :
டீன் எல்கர் (கேப்டன் ), டேவிட் பெடிங்ஹாம், நந்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன்.