2015-ம் ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்த நாம், இன்று 40-வது இடத்தில் இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று 108-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது, “இந்தியா கண்டுபிடிப்புகளின் மையமாக மாறி இருக்கிறது. இதை நாம் நிறுத்தப் போவதில்லை. 2015-ம் ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்தோம். இன்று 40-வது இடத்தில் இருக்கிறோம்.
“நாட்டு, நாட்டு” பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது நாடு முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” படத்துக்கு கிடைத்த கௌரவத்தை கேட்டதும் யார் மகிழ்ச்சி அடையவில்லை? இந்த 2 ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவின் படைப்பாற்றலை உலகமே கண்டு கொண்டது. சுற்றுச்சூலுடனான நமது தொடர்பை புரிந்துகொண்டது.
“சந்திரயான்-3″ வெற்றிக்காக இன்றும் மக்கள் எனக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். என்னைப் போலவே நீங்களும் நமது விஞ்ஞானிகளைப் பற்றி, குறிப்பாக, பெண் விஞ்ஞானிகளைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நம்புகிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது உட்பட பல சிறப்பான சாதனைகளை இந்த ஆண்டு இந்தியா செய்திருக்கிறது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமது பாரத பூமியை பெருமையடையச் செய்த மகள்கள் இருக்கிறார்கள். சாவித்ரிபாய் பூலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஆளுமை ஒரு கலங்கரை விளக்கம் போன்றது. இது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண் சக்திக்கு மேலும் வழிகாட்டும். இருவரின் பிறந்த நாளை வருகிற ஜனவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளோம்.
அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய நாட்டின் பல பெரிய ஆளுமைகளில் ராணி வேலு நாச்சியாரின் பெயரும் ஒன்று. அவரை தமிழகத்தின் என் சகோதர, சகோதரிகள் இன்றும் வீரமங்கை என்று நினைவுகூர்கிறார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ராணி வேலு நாச்சியாரின் வீரம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
சிவகங்கை ராஜ்ஜியத்தின் மீதான தாக்குதலின்போது மன்னராக இருந்தார். அவரது கணவர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டார். ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் எதிரிகளிடம் இருந்து தப்பினர். மருது சகோதரர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவதிலும், படை வளர்ப்பதிலும் பல ஆண்டுகளாக இடைவிடாமல் மும்முரமாக செயல்பட்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை முழு தயார் நிலையுடன் தொடங்கி மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் போராடினார். இராணுவத்தில் முதல் முறையாக அனைத்து மகளிர் குழுவை உருவாக்கியவர்களில் ராணி வேலு நாச்சியாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.