இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் தற்போது கால்பந்து விளையாடியும் சிறப்பாக விளையாடி வருகிறார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முன்பே கால்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்தது.
தற்போது அவரைப் போன்றே ஒரு கிரிக்கெட் வீரர் கால்பந்து வீரராகவும் உருமாறி வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை கேரளாவை சேந்த சஞ்சு சாம்சன் தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சன் சதம் அடித்த சாதனையை படைத்தார். 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சமீப காலமாக இந்திய அணியின் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.
#SanjuSamson playing Football in a local Sevens Tournament#Sanju #Samson pic.twitter.com/JvGMOPnC2Y
— Rohit (@___Invisible_1) December 30, 2023
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் அப்போட்டியில் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்நிலையில் இவர் அண்மையில் கேரளாவில் நடந்த கால்பந்து எழுவர் அணியில் இடம்பிடித்து அசத்தலாக விளையாடினார். இது தொடர்பான காட்சி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அபார ஆட்டத்தால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள சஞ்சு சாம்சன், கால்பந்து போட்டிகளிலும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது தந்தை ஒரு கால்பந்தாட்ட வீரர் என்பதால் அந்த விளையாட்டின் மீதும் சஞ்சுவுக்கு அதீத நாட்டமுள்ளது. இந்த சூழலில் உள்ளூர் கால்பந்து அணியிலும் சஞ்சு சிறப்பாக விளையாடி வருகிறார். எழுவர் மட்டுமே விளையாடும் போட்டிகளில் புகுந்து பந்தை லாவகமாக கடத்திச் செல்லும் காட்சிகள் அவரின் ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்படுகிறது.