2024-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமது X பதிவில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.
இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024 புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும் வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம்.
Wishing you all a Happy 2024
May this #NewYear bring happiness, success & good health.அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு-2024 நல்வாழ்த்துக்கள்…
మీ అందరికీ 2024 శుభాకాంక్షలు! ఈ #న్యూ ఇయర్ మీకు మరింత సంతోషాన్ని, విజయాన్ని & మంచి ఆరోగ్యాన్ని అందించాలి.#HappyNewYear… pic.twitter.com/lzzIi0DZ5r
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 31, 2023
ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம்.
இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.