தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் மும்முரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த விடியோவை பிசிசிஐ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#TeamIndia are back in the nets and prepping 🆙 for the 2nd Test in Cape Town👌👌#SAvIND pic.twitter.com/zcY5J0FafW
— BCCI (@BCCI) December 31, 2023