ஜப்பானில் 90 நிமிடங்களுக்குள் 21 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 4.0 ரிக்டர் அல்லது அதற்கு மேல் பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனை அடுத்து ஜப்பான் மேற்கு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் கடற்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கடலில் சுனாமி பேரலைகள் நகரங்களைத் தாக்கியது. ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் 90 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 21 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில்டி 4.0 அல்லது அதற்கு மேல் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கி உள்ளனர்.