பாரத நாடே அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக திருநாளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் , 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்புக் கலவர வழக்கில் கரசேவகர் ஒருவரை கைது செய்துள்ள நடவடிக்கை கர்நாடக காங்கிரஸ் அரசின் அப்பட்டமான பழிவாங்கும் செயலாக உள்ளது என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 20 வயதுடைய ஹூப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜாரி என்ற கரசேவகர், இப்போது ,30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்,
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கில் அவரைக் போலீசார் கைது செய்த. நிலையில் ,கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு இந்து மக்களைப் பயமுறுத்த பார்க்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது .
கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அசோக், “காங்கிரஸ் மீண்டும் வெறுப்பு அரசியலைத் தொடர்கிறது. முந்தைய சித்தராமையா ஆட்சியில் இந்து ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அயோத்தியில் கோயில் திறப்பு விழாவை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் போது, காங்கிரஸ் அச்சம் நிறைந்த சூழலை சித்தரிக்கிறது,” என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.
ராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற ஹுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு இந்து சேவகர்கள் , 31 ஆண்டு பழமையான வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இயக்கத்தில் நானும் பங்கு பெற்றிருந்தேன். என்னையும் கைது செய்வாயா? என்னை கைது செய்ய உனக்கு தைரியம் இருக்கிறதா?”.
இந்துகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு அரசை வலியுறுத்திய அசோக், பழைய வழக்குகளைத் தூசி தட்டி, செயல்பாட்டாளர்களைக் கைது செய்ய காவல் துறையில் விவாதங்கள் நடப்பது தங்களுக்குத் தெரியும் என்றார்.