கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கர்நாடகாவில் 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 245 ஆக உள்ளது. மேலும், 50 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
இதேபோல், கேரளாவில் புதிதாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 712 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 267 பேர் மீண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் புதிதாக 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 731 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 32 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 181 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் புதிதாக 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
அரியானாவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.