இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாம் ஒரு நாள் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது.
இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவை வெற்றி பெற விடாமல் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆஸ்திரேலியா அணியின் நோக்கமாக இருக்கும்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. மேலும் இப்போட்டியில் 33 % இந்தியா வெற்றி பெறும் என்றும், 67%ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.