அயோத்தி ராமர் கோயிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
”உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தன் பாரம்பரியத்தை கவனிக்கவேண்டும்!”
”வளர்ச்சியும், பாரம்பரியமும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும்”
”இன்றைய இந்தியா, பழமை மற்றும் நவீனத்துவத்துடன் முன்னோக்கி நகர்கிறது”
”வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் நம் நாட்டை, 21ம் நுாற்றாண்டில் முன்னோக்கி அழைத்துச் செல்லும்”
”அயோத்தி ராமர் கோயிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது”
இதுவெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் முதிர்ந்த முத்துக்கள்!
பாரம்பரியமும் வளர்ச்சியும் இணைகிறது!
ஒரு மனிதனிடம் அறிவும் பலமும் பணமும் பெருகுவதைப்போன்ற தன்மைதான் இன்றைய இந்தியாவின் நிலைமை!
வரும் 2024 ஜனவரி 22 ம் தேதி அயோத்தியில் ராமனின் இல்லத்தில் ராமனை மீண்டும்பிரதிஸ்டை செய்துவிட்டு, அதேகையோடு, பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேடின் அபுதாபியில் பிரம்மாண்டமான ஹிந்து கோயிலை பிப்ரவரி 14 ம் தேதி திறந்துவைக்கிறார் என்பது கூடுதல் செய்தி!
அன்றுமட்டுமல்ல என்றென்றுமே பாரதம் உலக குருதான்! உலக நாடுகள் முழுமையும் ஹிந்துக்கள் வசிக்கிறார்கள்! உலகம் முழுமையும் ஹிந்து கோயில்கள் இருக்கின்றன! உலகம் முழுமையும் காவிக்கொடி பறக்கிறது! உலகம் முழுமையும் சங்கத்தின் கிளைகள் இயங்குகின்றன!
“டேய் அன்று கேட்டாயே! இன்று அந்த வார்த்தையை கேளுடா பார்க்கலாம் ”- இது நாம் வழக்கமாக சினிமாவில் கேட்கும் வசனம்!
அன்று கேட்டதுபோல் இன்று ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்கமுடியுமா?
இனிவரும் காலங்களில் ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று சொல்ல முடியுமா?
ஹிந்து என்றால் திருடன் என்று சொல்வீரா? சனாதன ஹிந்து தர்மத்தை அழிப்பேன் என்று இன்னொருமுறை சொல்லுங்கள் பார்க்கலாம்! ” – இதுவெல்லாம் சாமானிய ஹிந்துக்களின் கேள்வியாக இருக்கிறது!
மக்களின் மனங்களிலே ஒரு காயம் இருக்கிறது! வேதனை இருக்கிறது! அதை வெளிப்படுத்துகிறார்கள்!
அயோத்தியில் பல கால கட்டங்களில் ராமரது கோயிலை இடித்திருக்கிறார்கள் உலக அயோக்கியர்கள்!
கடைசியாக இடித்தவந்தான் பாபர்! 550 ஆண்டுகளுக்கு முன்னால்! தங்களின் முப்பாட்டன்! தெய்வ அரசன்! பாரம்பரிய சொத்து! அத்தனை ஆண்டுகள் அவமானப்பட்டு இடிக்கப்பட்டு அதன் மேல் மாற்று அடையாளங்கள் திணிக்கப்பட்டு கிடந்ததை எண்ணி இன்றளவும் வேதனைப்படும் நிலை உள்ளது! அந்த வேதனைகளுக்கெல்லாம் மருந்தாக அவதார புருஷனாக வந்தவர்தான் பிரதமர் நரேந்திரமோடி!
”மீண்டும் உங்களிடம் வாக்குக்கேட்டு வரும்போது பிராக்கிரஸ் கார்டோடுதான் வருவேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் குறிப்பிட்டார்கள்! அதன்படி அவரது பிராகிரஸ் கார்டிலே இடம்பெறும் இந்த ”அயோத்தியில் ராமர் ஆலயம்” என்னும் திருப்பணிக்கு ஆயிரம் உலகங்களை பரிசாக கொடுக்கலாம்!
நாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்னும் உண்மை ஊருக்கு தெரியக்கூடாது என்பதற்காக பெயரிலேயே இந்தியா என வைத்துக்கொண்டவர்களின் கூட்டுறவு, ராமர் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு காரணமாக நெல்லிக்காய் மூட்டையாக சிதறி வருகிறது!
நாங்கள் ஹிந்துவுக்கு எதிரானவர்கள் அந்த குடமுழுக்கில் கலந்துகொள்ள மாட்டோம் என சொல்லிவிட்டது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி! அவரது பெயரோ சீதாராம் கெட்சூரி! அவர் சொன்னதோ சீதாராமனுக்கு கோயில் கட்டி பிரதமரே குடமுழுக்கு செய்வது சட்டப்படி குற்றம் என்று!
கஜினி முகமதுவால் இடைத்துத்தள்ளப்பட்ட குஜராத் சோமநாதர் ஆலயத்தை இந்திய காங்கிரஸ் அரசுதான் சீரமைத்து குடமுழுக்கு செய்தது! அரசாங்கம் செலவுசெய்தாலும் நான் அதில் கலந்துக்கொள்ள மாட்டேன் ஹிந்து கோயில் குடமுழுக்கில் கலந்துக்கொள்வது எனது கொள்கைக்கு எதிரானது என்று சொன்னார் இன்றைய காங்கிரசின் கொள்ளுத்தாத்தாவும் நமது முதல் பிரதம மந்திரியுமான ஜவஹர்லால் நேரு!
இப்போது விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விழிக்கிறது இத்தாலி தேசிய காங்கிரஸ்! ”தில்லை நடராஜனையும் ரங்கநாதனையும் பீரங்கிவைத்து தகர்க்கவேண்டும்”, என்று பேசிய திமுக, ராமரின் குடமுழுக்கில் கலந்துக்கொள்ளுமா? அவர்கள்தான் ஹிந்து தர்மத்தையே அழிப்போம் என்கிறார்களே! ஒருவேளை உள்ளே புகுந்தார்களானால் அவசியமான சோதனைகளை செய்தாக வேண்டும் என்பது நமது பரிந்துரையாகும்!
மொத்தத்தில் ராமர் அருளால் ராணணன் படைகள் சிதறி ஓடுகின்றன! பிரதமர் நரேந்திரமோடியை ஆட்சியை விட்டு இறக்குவதுதான் எங்களின் லட்சியம் என்று சொல்கிறார்கள் INDI கூட்டணியினர்! மோடி வேண்டாம் என ஒற்றை காலில் நிற்பதற்கு என்ன காரணம் என கேட்டால் அவர்களால் ஒரு காரணத்தைக்கூட சொல்ல முடியவில்லை!
காரணம் இருக்கிறது, அந்த காரனத்தை அவர்கள் சொல்ல மாட்டார்கள்! ஆனால் நம்மால் சொல்ல முடியும், மோடியின் ஆட்சி காரணமாக இவர்களால் ஊழல் செய்ய முடியாத நிலையும், ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை இழக்கும் நிலையும் இருப்பதாலேயே மோடி வேண்டாம் என்கிறார்கள்!
மோடியின் பொன்மொழிகளாக கட்டுரையின் துவக்கத்தில் சொன்னதைப்போல பாரம்பரிய பாதுகாப்பும் வளர்ச்சியும் மக்களை பூரிப்படைய செய்துவருவதால் பிரதமர் நரேந்திர மோடியை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரதமக்கள் மட்டுமின்றி உலக மக்களும் ஆதரிப்பர்! காரனம் ராமனின் தர்மமான ஹிந்து தர்மமே உலகிற்கு தேவையான தர்மமாகும்! எனத் தெரிவித்துள்ளார்.