இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த 3 பீல்டர்கள் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் தான் வெஙக்டேஷ் பிரசாத். இவர் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது அதில் ஒரு ரசிகர் எல்லா காலத்திலும் இந்தியாவின் சிறந்த 3 பீல்டர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட பதிவில், அசாருதீன், ரெய்னா, ஜடேஜா இவர்கள் தான் இந்தியாவின் ஆல் டைம் மூன்று சிறந்த பீல்டர்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
அதேவேளையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங்கின் பெயர்கள் அதில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
Azhar , Raina, Jadeja https://t.co/TkkClObia2
— Venkatesh Prasad (@venkateshprasad) December 31, 2023