சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம் ஆகும். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன.
இந்த ஆய்வு நிலையம் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. அதாவது, விண்வெளி நிலையம் பூமியை ஒரு நாளைக்கு 16 முறை சுற்றி வருகிறது. அதனால் இந்த வீரர்கள் 16 முறை சூரிய உதயம்,16 முறை அஸ்தமனங்களை காணுகின்றனர்.
இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாசா அளித்த தரவுகளின்படி, ISS (சர்வதேச விண்வெளி நிலையம்) 109 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டது, இது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்தைப் போன்றது, அதன் எடை 420 டன். இது பூமியைச் சுற்றி அதிவேகத்தில் பயணிக்கிறது.
இதனால் இதில் உள்ள விண்வெளி வீரர்கள் ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அதவாது ஜனவரி 1, 2024 இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு புத்தாண்டு கொண்டாடுவார்கள். இதற்கு காரணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில், கிரீன்விச் சராசரி நேரம் (Greenwich Mean Time) என்றும் அழைக்கப்படும் யுனிவர்சல் ஒருங்கிணைக்கப்பட்ட நேரத்தை (Universal Coordinated Time) பின்பற்றுகிறார்கள்.
யுசிடி மத்திய ஐரோப்பிய நேரப்படி ஒரு மணி நேரமும், இந்திய நேரப்படி ஐந்தரை மணி நேரமும் மணி நேரமும் பின்னால் உள்ளது. அதாவது நமக்கு புத்தாண்டு பிறந்து 5.30 மணி நேரத்திற்கு பின் ஐஎஸ்எஸ்ஸில் புத்தாண்டு கொண்டாடுவார்கள்.