அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!
Sep 17, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் மூலவர் குழந்தை இராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலம் வருகிறது.

பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம் மூலவர் குழந்தை இராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

‘பிராண பிரதிஷ்டை’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், நாடு முழுவதும் இருந்து 10,000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

எனவே, மூலவர் குழந்தை இராமர் சிலையை வரும் 17-ம் தேதி உலகுக்குக் காட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருப்பதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், “கோவில் கருவறையில் பாலராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

Tags: AyodyaRamar StatueJanuary 17Procession
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி,  பாஜக ஆட்சியில் 120 லட்சம் கோடி- பிரதமர் மோடி

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies