UPI-ல் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு 0.4 சதவீதம் சேவைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து வியாபாரிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தொகை அனுப்பப்படும்பட்சத்தில், அதற்கு 0.4 சதவீதம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
அதேவேளையில், தனிநபர்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றம் வழக்கம்போல இலவசமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணப் பரிமாற்றத்துக்கான அதிகபட்ச சேவைக் கட்டணம் 300 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண நிர்ணயம் வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, தொலைத்தொடர்பு சேவை, காப்பீடு மற்றும் எரிபொருள் நிலையங்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பணப் பரிமாற்றங்களுக்கு 5 ரூபாய் மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
















