மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலிடம் பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பூதூர் பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய மரகதம் குமரவேலிடம், தங்கள் பகுதிகளுக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கூறி மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கக்கூட மரகதம் குமரவேல் நேரம் ஒதுக்கவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். ஓட்டுக்காக மட்டுமே தங்களை சந்திக்க வருவதாகவும், இதுவரை தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
















