பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை - சிறப்பு தொகுப்பு!
Sep 15, 2026, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 15, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரதமர் மோடி, 72 மணிநேரத்தில் 15 உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

உலகின் பல நாடுகள் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.
உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியா வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து உலகின் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்துகொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசித்தார். அப்போது, இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். 6 மாதங்களாக ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கிய கவனம் பெற்றது. அப்போது மேற்காசிய போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதிகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிப்பதே இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். அப்போது, கருத்து வேறுபாடுகள் பூசல்களாக மாறக்கூடாது என்ற புரிதலோடு, பரஸ்பர மரியாதை, உணர்வுப்பூர்வ அணுகுமுறை, மற்றும் பரஸ்பர நலன் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உறவுகளைக் கட்டியெழுப்ப இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதேபோன்று, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் மலேசியா, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, கஜகஸ்தான், தென்னாப்பிரிக்கா, எகிப்து உள்ளிட்ட 15 உலக தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த சந்திப்புகள் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக Bharat Innovates கண்காட்சி நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), யுபிஐ வழி நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை உலக தலைவர்கள் தெரிந்துகொள்ள இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், ஏற்கனவே அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இவ்வாறு, பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு அணுகூலங்கள் கிடைத்துள்ளன. பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக பாராட்டு தெரிவித்து வருகின்றன.

Tags: putincbdc bricsbrics agendaBRICS summiteeuu bricsbrics dollarupi bricsputin bricschinrapib bricsbrics tradebrics paybrics venuebrics 2026brics chinabrics vs g7trump bricsPM Modibrics newsusa vs bricsIndiabrics liveindia bricsrussiamodi bricsbrics indiabricsbrics 2024brics delhi
Share
Tweet
SendShare
Previous Post

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

Related News

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies