மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Sep 17, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Manikandan by Manikandan
Sep 17, 2026, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 25 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ம் தேதி வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து நடைபெற்ற யாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களுடன் சிவாச்சாரியார்கள் புறப்பட்டு, காலை 7.40 மணியளவில் அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, காலை 7.55 மணிக்கு அம்மன் சன்னதிக்கும், 8.10 மணிக்கு சுவாமி சன்னதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9 ஆயிரம் பக்தர்கள் கோயிலின் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மாசி வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள், கும்பாபிஷேகத்தை பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் உள்ள 12 கோபுரங்கள், மதில் சுவர்கள், மரங்கள் மற்றும் பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் உட்புறத்திலும் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு 2 லட்சம் பிரசாதப் பைகள் வழங்கப்பட்ட நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவைக் காண, தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் ஆங்காங்கே 3 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் கோயிலுக்கு வந்த பக்தர்கள், எல்இடி திரைகளில் நேரடியாக ஒளிபரப்பான கும்பாபிஷேகக் காட்சிகளை கண்குளிரக் கண்டு மகிழ்ந்தனர்.

 

Tags: MaduraitempleKumbabishekamMeenakshi
Share
Tweet
SendShare
Previous Post

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

Next Post

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Related News

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies