100 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தினர்.
சாட்சிகளின் வாக்குமூலங்கள். ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், அன்பில் மகேஷின் உதவியாளர் வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது
















