இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை Tier 2, Tier 3 நகரங்களில் விரிவடைந்து வருகிறது. இதில் Bharathi Meraki ஆற்றி வரும் பணிகளை இந்த சிறப்பு தொகுப்பில் காண்போம்.
இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெருநகரங்களைத் தாண்டி Tier 2 மற்றும் Tier 3 நகரங்கள் புதிய ஹோட்டல் வளர்ச்சியின் முக்கிய மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, Bharathi Meraki நிறுவனத்தின் நிறுவனர் அருண் பாரதி அருணாச்சலம் தலைமையிலான அணியுடன் மேற்கொள்ளப்பட்ட development partnership முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த கூட்டாண்மையின் முக்கிய அம்சமாக, திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிலும், நிர்ணயிக்கப்பட்ட செலவுக்குள்ளும் செயல்படுத்தும் Bharathi Meraki அணியின் திறன் பாராட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த பட்ஜெட் சூழலிலும் execution quality மற்றும் cost discipline- ஐ தக்க வைத்திருப்பது அவர்களின் முக்கிய வலிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய சந்தைகளில் வலுவான execution capability கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவசியமாகி வருகிறது.
அந்த வகையில், Bharathi Meraki உடனான இந்த கூட்டாண்மை, அவர்களது முதல் regional developer partnership என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியை தரைமட்டத்தில் Manas Prakash முன்னெடுத்து வருகிறார்.
இந்த அணுகுமுறைக்கான காரணம் தெளிவானது. இந்தியாவில் புதிய ஹோட்டல் அறைகள் உருவாகும் வளர்ச்சி இனி Mumbai, Delhi போன்ற முக்கிய பெருநகரங்களுக்குள் மட்டும் சுருங்கியிருக்கவில்லை.
Tier 2 மற்றும் Tier 3 நகரங்கள் புதிய வளர்ச்சி மையங்கள் JLL தரவுகளை மேற்கோள் காட்டி பகிரப்பட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் branded hotel signings-இல் 71% Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் நடைபெற்றுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 120-க்கும் மேற்பட்ட நகரங்களில் 30,000-க்கும் அதிகமான ஹோட்டல் அறைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது சில தனிப்பட்ட திட்டங்களின் வளர்ச்சி மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் ஒரு புதிய hospitality infrastructure ecosystem உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்த வளர்ச்சியில், சந்தையை நன்கு அறிந்த, வேகமாக செயல்படும் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டுடன் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய regional developers முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
“இந்திய ஹாஸ்பிட்டாலிட்டியின் அடுத்த பத்தாண்டு வளர்ச்சி Mumbai மற்றும் Delhi போன்ற நகரங்களில் மட்டும் கட்டப்படப் போவதில்லை. இதுவரை பெரிய நிறுவன முதலீடுகளின் கவனத்திற்கு முழுமையாக வராத நகரங்களில்தான் அதன் அடுத்த பெரிய வளர்ச்சி உருவாகிறது.”
Bharathi Meraki போன்ற வலுவான regional development partners உடனான கூட்டாண்மை இந்தியாவின் வளர்ந்து வரும் நகரங்களில் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், புதிய hospitality capacity-ஐ உருவாக்கவும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















