பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தங்க மோதிரம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு, இன்று பிறந்த 18 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
















