இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் சவூதி அரேபியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியா தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வரும் நிலையில், மெக்கா நகரில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மெக்கா நகரை நோக்கி வந்த ட்ரோன்களை சவூதி வான்பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்தனர். இதையடுத்து சவூதி குடிமை பாதுகாப்பு இயக்குநரகம், பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுவதுடன், ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு எச்சரித்தது. வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மெக்காவை குறிவைத்தது கண்டிக்கத்தக்கது என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
















