நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டன.
இதற்கு, பாரதிய நியாயச் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷாசன்ஹிதா, பாரதிய சாக்ஷியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில், மருத்துவம், போக்குவரத்து, கல்வி எனப் பல்வேறு துறைகளில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராகத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மருத்துவத்துறையில் தவறான சிகிச்சை அளித்து, அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட டாக்டருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனப் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
அதுபோல, சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம், நாடு முழுவதும் உள்ள பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.