இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2024 ஆண்டு முழுவதும் தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் பயண கைதிகளாக 240 பேரை பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 87வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசா மீதான தாக்குதல் 2024ஆம் ஆண்டு வரை தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
நீண்ட சண்டைக்கு இராணுவம் தயாராகி வருவதாகக் கூறினார், இது “இந்த ஆண்டு முழுவதும்” நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே இஸ்ரேல் ஏவுகணைகள் ரஃபா நகரை நோக்கி பறந்ததாகவும், ஒரு பெரிய அகதிகள் முகாமான ஜபாலியாவைச் சுற்றி ஷெல் வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் குண்டுவீசித் தாக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 சடலங்கள் மீட்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.