இந்த ஆண்டில் எந்தெந்த நாடுகள் தேர்தலை நடத்துகிறது என்பதை குறித்து பார்ப்போம்.
2024ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவு இந்தியா உட்பட உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தேர்தலை சந்திக்கின்றன, அதனைக் குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
1. இந்தியா :
இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. வங்காளதேசம் :
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு ஜனவரி 7ஆம் தேதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது.
3. தைவான் :
இந்த வருடம் தைனாவில் ஜனவரி 13ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கானப் பணிகளும் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது.
4. இங்கிலாந்து :
இந்த வருடம் இங்கிலாந்து நாட்டிலும் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. பாகிஸ்தான் :
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் வரும் பிப்ரவரி 08 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
6. ரஷ்யா :
ரஷ்யாவில் 2024ஆம் ஆண்டில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் பதவி காலம் முடிவதால் மார்ச் 17ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
7. அமெரிக்கா :
அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நவம்பர் 05 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோரும் கவனம் பெற்றுள்ளனர்.
8. உக்ரைன் :
உக்ரைனில் இந்த ஆண்டு பொது தேர்தல் மார்ச் 31 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்நாட்டுச் சட்டத்தின்படி போர் காரணமாக அதிபர் தேர்தல் ஒத்திப்போடப்படும் என்று கூறப்படுகிறது.
9. தென் ஆப்பிரிக்கா :
தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு தேசிய சட்டமன்ற தேர்தல் மே அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10. உஸ்பெகிஸ்தான் :
உஸ்பெகிஸ்தானில் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி இந்தோனேஷியா, ஈரான், மெக்சிகோ போன்ற 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.