இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சமூக ஊடக கணக்குகள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, வாட்ஸ் ஆப் கணக்குகள் குறித்து மெட்டா நிறுவனம் முக்கியத் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் கணக்குகளைப் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும், வாட்ஸ்அப் கணக்கு மூலம் மோசடியும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மோசடி மற்றும் வீதிமீறல்களில் ஈடுபடும் வாட்ஸ் ஆப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மோசடி மற்றும் வீதிமீறல்களில் ஈடுபட்ட 71 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.