அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரில் நன்கொடை மோசடி! 

பக்தர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விஎச்பி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை  பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கிரிமினல் மோசடி நாடு முழுவதும் முளைத்துள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறி போலி QR குறியீடுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு மோசடி பேர்வழி, அயோத்தி கோயில் வளர்ச்சிக்காக பல்வேறு ஆன்லைன் குழுக்களில் செய்திகளை வெளியிட்டு, அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தைப் பெறுவதற்காக நிதி கோரி வந்ததை விஹெச்பி வெளிப்படுத்தியுள்ளது.

அவன் UPI QR குறியீடுகளை ஃபேஸ்புக் குழுக்களில் ‘ராம் மந்திர் அயோத்தி சந்தா பிரதர்ஷன் கரேன்’ என்ற வரியுடன் பதிவிட்டுள்ளான் என்றும் எச்சரித்துள்ளது. அயோத்தியைச் சேர்ந்த விஹெச்பி உறுப்பினர் ஒருவர் குமாரிடம் தொலைபேசியில் பேசியபோது,  “உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் பெயரும் எண்ணும் டைரியில் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், நீங்கள் அனைவரும் அயோத்திக்கு அழைக்கப்படுவீர்கள் என அவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் பணம் பெற பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மோசடியான முறையில் மக்களை ஏமாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஎச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

Tags: cybercriminalsVHPayodhya ramar templeDevoteesfake QR codesVishwa Hindu Parishad
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை – அதிர்ச்சியில் பக்தர்கள்!

Next Post

ஒரே மாதம் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் க்ளோஸ் – என்ன காரணம்?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies