2024-ம் ஆண்டை தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டை தமிழ்நாட்டில், இளைஞர்களிடையே ஒரு பொது நிகழ்ச்சியுடன் தொடங்கியது குறித்து மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
2024-ஆம் ஆண்டின் எனது முதல் பொதுக்கூட்டம், சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில், நமது இளைஞர்கள் மத்தியில் நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ஒரு சில காட்சிகளை பகிர்கிறேன். pic.twitter.com/IS4ZuRPdiZ
— Narendra Modi (@narendramodi) January 2, 2024
2024-ஆம் ஆண்டின் எனது முதல் பொதுக்கூட்டம், சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில், நமது இளைஞர்கள் மத்தியில் நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.