சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவிற்கு இரண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “உலக மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு நடத்திய 18-வது தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை பிராண்ட் விருதுகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த பணியமர்த்தல் பிராண்ட் மற்றும் மனிதவளத்திற்கான சிறந்த பங்களிப்புகள் என்ற பிரிவில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த விருதுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா பெற்றுக்கொண்டார். அவர்களுடன் கூடுதல் பொது மேலாளர் T.P.வினோத் குமார், (மனித வளம்), மேலாளர் R.G.ரஞ்சித், (மனித வளம்), மற்றும் துணை மேலாளர் S.ரகுராமன், (மனித வளம்), உடன் இருந்தனர்.
அமெரிக்கா பெர்க்ஷயர் மீடியா எல்எல்சி, நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் மனிதவள சிறந்த நடைமுறைகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு “சிறந்த மனித வளத்துறை கையாளுதல் மற்றும் மனிதவள நடைமுறைகளை வளர்ப்பதில் முதன்மையான மெட்ரோ இரயில் சேவைகள்’ என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் சென்னை மெட்ரோ இரயிலின் மனிதவளத்துறையின் சாதனையைக் குறிக்கின்றன. நாட்டின் முன்னணி நிறுவன பிராண்ட் மற்றும் மனிதவளத்துறையின் அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.