இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருக்கிறது.
டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெறு வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைப்பெறவுள்ளது.
இப்போட்டியானது நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் புத்தாண்டு அன்று கேப் டவுனில் களமிறங்கினர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
ஆகையால் இந்த தொடரை சமன் செய்ய இன்றையப் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதேபோல் போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
இப்போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.