பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!
Jul 29, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!

வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்தியர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் ஆகியோரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதேபோல, இந்தியாவும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

அதேசமயம், தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள குடிமக்கள், மீனவர்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ம் தேதியும், ஜூலை மாதம் 1-ம் தேதியும் இரு நாடுகளும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளும் தங்களது சிறைகளில் இருக்கும் குடிமக்கள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை பரிமாறிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படும் 81 மீனவா்கள் உட்பட 418 பேர் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா பகிர்ந்திருக்கிறது.

அதேபோல, இந்தியர்கள் என்று நம்பப்படும் 184 மீனவர்கள் உட்பட 231 போ் குறித்த தகவலை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் நாடு அளித்த பட்டியலின்படி, 184 இந்திய மீனவா்கள் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் இன்னும் அந்நாட்டுச் சிறையில் இருந்து வருகிறார்கள்.

ஆகவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2,639 இந்திய மீனவர்கள், 67 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, கடந்த ஆண்டில் மட்டும் 478 இந்திய மீனவர்கள், 9 இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiapakistaninsistreleasePrisoners
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : வெல்லப்போவது யார்?

Next Post

துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்! – அண்ணாமலை

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies