அசாம் மாநிலம் கோலாகாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“அசாமின் கோலாகாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.
Pained by the loss of lives due to a road mishap in Golaghat, Assam. Condolences to the bereaved families. May the injured recover at the earliest. The local administration is providing all possible assistance to those affected. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be…
— PMO India (@PMOIndia) January 3, 2024
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.