"செபி"யே விசாரிக்கும்: அதானிக்கு புத்தாண்டில் "குட் நியூஸ்"!
Feb 7, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“செபி”யே விசாரிக்கும்: அதானிக்கு புத்தாண்டில் “குட் நியூஸ்”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமத்தின் மீதான வழக்கை “செபி” எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இதனால் அதானி குழும பங்குகள் 15% வரை உயர்ந்திருக்கின்றன.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகளவில் 3-வது பணக்காரராகவும் இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி.  இந்த சூழலில், அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.

மேலும், பங்குச்சந்தை மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது. பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தன.

இதனிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்தக் குழுவினர் விரிவான விசாரணை நடத்தி தங்களது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில்தான், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பில் அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்றும், விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மேலும், 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். செபியின் ஒழுங்குமுறை சட்டத்துக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும்.

ஒழுங்குமுறையை திரும்பப்பெற செபி அமைப்புக்கு உத்தரவிட சரியான காரணங்கள் இல்லை” என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இதையடுத்து, இத்தீர்ப்பு தொடர்பாக கௌதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மதிப்புக்குரிய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு உண்மை நிலைநாட்டப்பட்டதைக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு எங்களின் பங்களிப்பு தொடரும். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

The Hon'ble Supreme Court's judgement shows that:

Truth has prevailed.
Satyameva Jayate.

I am grateful to those who stood by us.

Our humble contribution to India's growth story will continue.

Jai Hind.

— Gautam Adani (@gautam_adani) January 3, 2024

 

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதானி குழும பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் 6.68 சதவீதமும், அதானி போர்ட்ஸ் & SEZ  3.56 சதவீதமும், அதானி பவர் 4.87 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன் 14.39 சதவீதமும் (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்), அதானி கிரீன் எனர்ஜி 7.26 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 10.00 சதவீதமும், அதானி வில்மார் 6.82 சதவீதமும், ஏசிசி லிமிடெட் 2.08 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 3.00 சதவீதமும், NDTV 9.88 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன.

Tags: supreme courtAdani GroupJudgementHindenburg caseSebi investigate
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: இந்தியா பந்துவீச்சு!

Next Post

2024 : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது!

Related News

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies