இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 440 ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 440 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 77 ஆயிரத்து 272 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.