புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை,
“மத்திய அரசும் மாநில அரசு இணைந்து புதுச்சேரி மக்கள் 2024-ல் மகிழ்ச்சியாக வாழ அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் என்றார். எல்லா விதத்திலும் வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாறி வருகிறோம் என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும்” என்றார்.
“ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. இந்நிழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
இது குறித்து காவல்துறைக்கும் அரசுக்கும் தெரிவிப்பேன். கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறி வரக்கூடாது. இதில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு எவ்வகையிலும் புறக்கணிக்காது. வட மாநிலங்களுக்கு மட்டும் செய்வதாக கூறுகிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் திருச்சியில் சொல்லியுள்ளார். எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்ததாக நாட்டை மத்திய அரசு முன்னேற்றுகிறது.
கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதும் டிஜிபியிடம் தெரிவிப்பேன். தெலங்கானா முந்தைய முதல்வர் அரசியலமைப்பை மதிக்கவில்லை.
புது அரசு வந்துள்ளது. முதல்வர் வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் புரிந்துணர்வு நட்புணர்வு இருந்தால் மக்களுக்கு பலன் தரும். கருத்து வேறுபாடு மோதலாக இருக்கக் கூடாது” என்று தமிழிசை குறிப்பிட்டார்.