ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு, 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கடியில், 29 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத்தில் நள்ளிரவு 12.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இதை அடுத்து, பைசாபாத்தில் நள்ளிரவு 12.55 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. தொடர்ந்து, நிலநடுக்கம் ஏற்படுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.