ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.01 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை சுமார் 9 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 180 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. இது பூமிக்கடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கோண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.