சபரிமலை டைரியில் பினராயி விஜயன் படம்: பக்தர்கள் எதிர்ப்பு!
Sep 10, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை டைரியில் பினராயி விஜயன் படம்: பக்தர்கள் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 11:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற திருக்கோவில்களில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர  விளக்குப் பூஜையையொட்டி, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோவில் நடை திறப்பது வழக்கம்.

இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாவின் போதும் நடை திறக்கப்படும்.சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான டைரியில் 2024 கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படம் இடம்பெற்றுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஐயப்பன் கோயிலில் விற்பனை செய்யப்பட்டு வரும் அந்த டைரியில்,  தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் படங்கள் எவ்வாறு கோயில் டைரியில் இடம்பெற முடியும் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆண்டுதோறும் வெளியாகும் அந்த டைரியில், சபரிமலை கோவில் நடை திறப்பு  நாட்கள், பூஜை விவரங்கள், பூஜை கட்டணம் உள்ளிட்ட சபரிமலை தொடர்பான  அனைத்து விவரங்கள் மற்றும் கேரளாவில் உள்ள முன்னணி கோவில்கள் மற்றும் சுவாமி படங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக முதன்முதலாக பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Sabarimala Diarysabarimala diary issuekerala cmSabarimala Ayyappan temple!Pinarayi Vijayan
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!

Next Post

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு ஏற்பட்ட சிக்கல் : முக்கிய வீராங்கனை விலகல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies