இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு ஏற்பட்ட சிக்கல் : முக்கிய வீராங்கனை விலகல்!
Sep 20, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு ஏற்பட்ட சிக்கல் : முக்கிய வீராங்கனை விலகல்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியிலிருந்து இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் வந்தனா விலகியுள்ளார்.

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூஸிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.

முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ராஞ்சியில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் வந்தனா அணியிலிருந்து விலகியுள்ளார். எதிர்பாராதவிதமாக முன்கள வீராங்கனையான வந்தனா கட்டாரியாவுக்கு பயிற்சியின் போது எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் இருந்து விலகி விலகியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த அவரது விலகல் இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவருக்குப் பதிலாக இளம் வீராங்கனை பல்ஜீத் கவுர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த நிக்கி பிரதான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: hockey teamindian womens hockey team
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலை டைரியில் பினராயி விஜயன் படம்: பக்தர்கள் எதிர்ப்பு!

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies