சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து, ரூ. 46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 47 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ரூ. 46 ஆயிரத்து 960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 45 குறைந்து, ரூ. 5 ஆயிரத்து 870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ. 49 குறைந்து, ரூ. 6 ஆயிரத்து 404-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து, ரூ. 78-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2 ஆயிரம் குறைந்து, ரூ. 78 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.