குடியரசு துணைத் தலைவர் ஜனவரி 6-ம் தேதி இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வருகின்ற ஜனவரி 06 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின் போது, ஹமீர்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (என்.ஐ.டி) செல்லும் குடியரசு துணைத்தலைவர், அங்கு ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ல் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றுகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கல்விக்கான அணுகலை மேம்படுத்தும் முன்முயற்சியான ‘ஏக் சே ஸ்ரேஷ்டா’வின் 500-வது மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தன்கர் கலந்துரையாடுகிறார்.