இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 423 ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 423 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 775 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 78 ஆயிரத்து 47 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இதற்கிடையில், நாட்டில் நேற்று வரை மொத்தம் 511 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவில் 199 பேருக்கும், கேரளாவில் 148 பேருக்கும், கோவாவில் 47 பேருக்கும், குஜராத்தில் 36 பேருக்கும், மகாராஷ்டிராவில் 32 பேருக்கும், தமிழ்நாட்டில் 26 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும், ராஜஸ்தானில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 பேருக்கும், ஒடிசா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவருக்கும் என 511 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.