கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கர்நாடகாவில் 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 175 ஆக உள்ளது. மேலும், 228 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
இதேபோல், கேரளாவில் புதிதாக 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 464 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 343 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் புதிதாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 862 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 75 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 178 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 10 பேர் மீண்டுள்ளனர்.